யாகவராயினும் நாகாக்க என்ற படத்தில் இணைந்து நடித்த ஆதியும் நிக்கி கல்ராணியும் அடுத்ததாக மரகதநாணயம் என்கிற படத்திலும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவரும் காதல் வயப்பட்டாலும் கூட அதை வெளிப்படுத்தாமல் நட்பு என்கிற பெயரிலேயே பழகி வந்தனர்.
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் கடந்த மே மாதம் திருமண தங்களது காதலை பந்தமாக மாற்றினர்.
இந்த நிலையில் தங்களுக்கு திருமணமாகி 100 நாட்கள் ஆகிவிட்டதை தற்போது மகிழ்ச்சிகரமாக கொண்டாடி வருகின்றனர் ஆதியும் நிக்கி கல்ராணியும்.
தற்போது பாரிஸ் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர்கள், அங்கே தங்களது நூறாவது நாள் திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தை புகைப்படங்களாக மாற்றி அதனை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.