V4UMEDIA
HomeNewsKollywoodவிரைவில் வீடு திரும்புவேன் ; பாரதிராஜா வெளியிட்ட தகவல்

விரைவில் வீடு திரும்புவேன் ; பாரதிராஜா வெளியிட்ட தகவல்

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தற்போது வேறு ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வயதிலும் எப்போதும் சுறுசுறுப்பும் கம்பீரமுமாக வலம்வரும் பாரதிராஜா இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டு ரசிகர்களும் திரையுலகத்தை சேர்ந்தவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் நலமுடன் வீடு திரும்ப பிரார்த்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா தான் நலமாக இருப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவேன் என்றும் ரசிகர்கள் யாரும் இதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் பாரதிராஜா.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் யாரும் நேரில் சந்திப்பதற்கு வந்து சிரமப்பட வேண்டாம் என்றும் விரைவில் தானே வீடு திரும்புவேன் என்றும் அப்போது உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறி ரசிகர்களையும் தனது நண்பர்களையும் ஆசுவாசப்படுத்தி யுள்ளார் பாரதிராஜா.

Most Popular

Recent Comments