கடந்த 2019ல் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்ல, விமர்சிகளிடமும் கூட அருமையான படம் என பெயர் வாங்கிய படம் ‘ஜீவி’. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரை போல நேர்த்தியாக படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் V.J.கோபிநாத்.
இந்தநிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜீவி 2’ என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆகஸ்ட்-19ல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது..
முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் “ஜீவி-2 படம் இன்று அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்த ரசிகர்களும் சரி, தயாரிப்பாளரும் சரி இருவருமே சந்தோஷப்படும் விதமாக அமைந்துவிட்டது இந்த ‘ஜீவி 2’ படத்தின் பல காட்சிகளில் மூன்றாம் பாகத்திற்கான லீட் வைத்து தான் கதையை உருவாக்கி இருக்கிறேன். ஆனாலும் மூன்றாம் பாகத்திற்கான தேவையை சூழல்தான் தீர்மானிக்கும்” என கூறியுள்ளார் .இயக்குநர் V.J.கோபிநாத்.