கொரோனா தாக்கத்திற்கு பிறகு சினிமாவின் நிலையும் தியேட்டர்களின் நிலையும் மாறிவிடும் என்றே பலரும் நினைத்திருந்தனர். குறிப்பாக ஓடிடி தளங்கள் வந்த பின்பு ரசிகர்கள் வீட்டிலிருந்து படம் பார்க்க விரும்புவார்கள் என்றும் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவது குறையும் என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆச்சரியமாக இவற்றை பொய்யாக்கும் விதமாக மாதத்திற்கு ஒரு படமாவது ரசிகர்களை கவரும் விதமாக வெளியாகி பழையபடி தியேட்டர்களை திருவிழா கோலத்திற்கு அழைத்து வந்துள்ளன.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/03/rrr-8.jpg)
அந்த வகையில் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, விக்ரம் என பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/06/1-vikram-review-1024x576.jpg)
இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படமும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. படம் வெளியாகி இரண்டாவது வாரம் ஆனபோதிலும் சனி. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/08/thiruchitrambalam-2-3.jpg)
குறிப்பாக தனுஷின் அசுரன், கர்ணன் ஆகிய படங்களுக்கு எப்படி ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படை எடுத்தார்களோ அதேபோல இப்பொழுதும் மீண்டும் ஒரு திருவிழா நடத்திக் காட்டியிருக்கிறார் தனுஷ்.
ஏற்கனவே தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களின் மூலம் ஹாட்ரிக் வெற்றிகளை வெற்றிகளை தந்த மித்ரன் ஜவஹர், திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/08/thiruchitrambalam-1-3-820x1024.jpg)
இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன் இவர்களின் நட்பு மற்றும் நடிப்பு, ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோரின் கச்சிதமான கதாபாத்திர வடிவமைப்பு, தாத்தா பாரதிராஜாவின் அன்பு, தந்தை பிரகாஷ்ராஜின் நேசம் கண்டிப்பு என எல்லாம் கலந்து இந்தப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு படமாக அமைந்தது தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம் என்று தியேட்டர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.