V4UMEDIA
HomeNewsKollywoodகணம் படத்திற்கு அமலா தான் பொருத்தமானவர் ; ஷர்வானந்த்

கணம் படத்திற்கு அமலா தான் பொருத்தமானவர் ; ஷர்வானந்த்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கணம். கமர்சியல் படங்களை மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமான படங்களையும் இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அந்த வகையில் அம்மாவின் அன்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக ஷர்வானந்த் நடித்துள்ளார்

முக்கிய வேடத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அமலா நடித்துள்ளார்

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஷர்வானந்த் கூறும்போது, ‘இந்த படத்தின் கதையை இயக்குனர் ஸ்ரீ என்னிடம் சொன்னதுமே அந்த முக்கிய கதாபாத்திரத்தில் அமலா மேடம் தான் பொருத்தமாக இருப்பார் என கூறினேன் .அதற்கு ஏற்ற மாதிரி அவரும் கதை கேட்டதும் பிடித்து போய் ஒப்புக்கொண்டார்

இது போன்ற படம் 10 வருடங்களுக்கு ஒரு முறை தான் வரும். நான் இதுவரை கமர்சியல் படங்களில் தான் நடித்திருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் நடிக்கும்போது, ஒரு பாதுகாப்பற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் இந்த கதையின் மீதும் உணர்வின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த கதை என்னை தேடி வந்ததை பாக்கியமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்

Most Popular

Recent Comments