இயக்குனர் சீனுராமசாமி – விஜய்சேதுபதி கூட்டணியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாமனிதன் திரைப்படம் வெளியானது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெற்றி பெற்றிருந்த தர்மதுரை படத்தை தொடர்ந்து இந்த படம் வெளியானதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. அதனால் ஓடிடி ரிலீஸை தவிர்த்து நேரடியாக தியேட்டர்களிலேயே இந்த படம் வெளியானது.

தர்மதுரை அளவுக்கு இந்த படத்திற்கு வசூல் ரீதியான வரவேற்பு இல்லை என்றாலும் அந்த படத்தை விட விமர்சன ரீதியாக இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பல சர்வதேச திரைப்பட விழாக்களின் கலந்து கொண்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகளை தொடர்ந்து அள்ளி வருகிறது .

அதைத்தொடர்ந்து ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான பின் இன்னும் அதிகப்படியாக வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பார்வையாளர்கள் இந்த படத்தை ஓடிடி தளத்தில் பார்த்து ரசித்துள்ளனர் இது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இதனை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளராக யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்
