V4UMEDIA
HomeNewsKollywoodகேப்டனின் 70-வது பிறந்தநாளில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கார்த்தி

கேப்டனின் 70-வது பிறந்தநாளில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கார்த்தி

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டவர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் புரட்சி கலைஞர் விஜயகாந்த் இருந்தார். அதிரடி ஆக்சன் காட்சிகள் ஆகட்டும் அனல் தெறிக்கும் வசனங்கள் ஆகட்டும் விஜயகாந்துக்கு மிஞ்சிய நபர் யாரும் இல்லை என்கிற அளவுக்கு ரஜினி, கமலுக்கு இணையாக தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்து வெற்றி நடை போட்டார்.

ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து புதிய கட்சி ஒன்றை துவக்கி எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் மாறினார் கடந்த சில வருடங்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு அவ்வப்போது சிகிச்சை எடுத்துக் கொள்வதும் வீட்டில் ஓய்வில் எடுப்பதுமாக முற்றிலும் புதிய வாழ்க்கை முறையாக அவரது வாழ்க்கை மாறிவிட்டது.

சில முக்கியமான நாட்களில் மட்டும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து நிர்வாகிகளை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார் விஜயகாந்த். இந்த நிலையில் இன்று அவரது 70 வது பிறந்தநாளை தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடினார் விஜயகாந்த்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நடிகர் கார்த்தி நேரிலேயே வந்து மலர்க்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் கேப்டன் விஜயகாந்தை சந்தித்தது குறித்து அவர் கூறும்போது, “விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம் தான். அதேபோல், யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டிருக்கேன்.

யாரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவது தான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது” என்றார்

இந்த நிகழ்வின்போது சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமசந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.

Most Popular

Recent Comments