இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை பென்சில் என்கிற படம் மூலமாக கதாநாயகனாக மாற்றியவர் இயக்குனர் மணி நாகராஜ்.
45 வயதான இவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார். தற்போது இவர் வாசுவின் கர்ப்பிணிகள் என்கிற படத்தை இயக்கி வந்தார்.
படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இவரது அகால மரணம் திரையுலகினரையும் படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
மதுரையை சொந்த ஊராகக் கொண்ட மணி நாகராஜ் இயக்குனர் கவுதம் மேனனிடம் காக்க காக்க படம் முதல் விண்ணை தாண்டி வருவாயா படம் வரை பணியாற்றி உள்ளார். பென்சில் படத்தின் மூலம் இயக்குனராக மாறினார்.
தற்போது மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் வாசுவின் கர்ப்பிணிகள் என்கிற படத்தை இயக்கி வந்தார் இது மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்படும் படமாகும்.