தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து நிலைத்து நிற்கும் நடிகைகள் என கணக்கிட்டால் அதில் நான்கைந்து பேர் மட்டுமே இருப்பார்கள். அதில் ஒருவர் தமன்னாவாக இருப்பார். இப்போது வரை தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கதாநாயகியாகவே நடித்து வருகிறார் தமன்னா.

கடந்த சில நாட்களாக ஹாலிவுட்டில் தயாராகி இந்தியாவில் வெளியாகும் தி லார்ட் ஆப் ரிங்க்ஸ் ; தி ரிங்ஸ் ஆப் பவர் படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் தமன்னா. தனக்கு சம்பந்தமே இல்லாத படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாரே, அப்படியானால் தமன்னாவுக்கு பட வாய்ப்புகளே இல்லையா என்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அவர் கைவசம் இந்த வருடம் மட்டும் ஆறு படங்களுக்கு மேல் இருக்கிறது.

சமீபத்தில் தமன்னா மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் வழிபட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. அதன் பின்னனி என்ன தெரியுமா ? அவர் நடித்துள்ள பப்ளி பவுன்சர் என்கிற படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது..

இந்தப்படத்தில் அவர் மட்டுமல்ல, இதுவரை வேறு எந்த நடிகைகளுமே நடித்திராத லேடி பவுன்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமன்னா. இந்த படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருந்தாலும் இப்போதிருந்தே இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கி விட்டனர்.

படத்தின் நாயகியான தமன்னாவும் தனது ஒத்துழைப்பை தந்து பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.

அதன் முதல் நிகழ்ச்சியாக தான் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு படத்தின் இயக்குனர் மதூர் பண்டர்கருடன் சென்று வழிபட்டுள்ளார் தமன்னா.