இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் பொதுமக்களிடம் ஓரளவு மாற்றத்தையும் ஏற்படுத்திய படம் தான் இந்தியன். லஞ்சத்துக்கு எதிராக உருவான இந்த படம் கமல், ஷங்கர் இருவரின் திரையுலக பயணத்திலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து விட்டது.

இந்தநிலையில் இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து அதாவது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன் 2 என்கிற பெயரில் ஆரம்பித்தனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தொடங்கியது

சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் கொரோனா தாக்கம் உள்ளிட்ட சில காரணங்களால் படபிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் கமல் விக்ரம் படத்தில் பிஸியாகிவிட்டார். ஷங்கர் ராம்சரண் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் இந்தியன் 2 படம் குழப்பங்களும் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு மீண்டும் படம் துவங்கியுள்ளது இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்தப்படத்தின் தயாரிப்பில் உதயநிதியின் ரெட் ஜெயந்த் நிறுவனமும் இணைந்த்கொண்டுள்ளது இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு மீண்டும் புதிதாக பூஜை போடப்பட்டு உள்ளது..

இந்த நிகழ்வில் சங்கர் உள்ளிட்ட பரக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்