Home News Kollywood காபி வித் காதல் படத்தின் நான்காவது சிங்கிளும் வெளியானது

காபி வித் காதல் படத்தின் நான்காவது சிங்கிளும் வெளியானது

90களுக்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர்களில் இன்றளவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தங்களுக்கான இடத்தில் நிலையாக அமர்ந்திருக்கும் இயக்குனர்கள் வெகு சில பேர் தான். அவர்களில் காமெடி கிங் என அசைத்துக்கொள்ள முடியாத பெயரை பெற்றிருக்கும் இயக்குனர் சுந்தர்.சியும் ஒருவர்.

அவரது படங்களுக்கு எப்பொழுதுமே திரை உலக மார்க்கெட்டில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. தவிர கூட்டம் கூட்டமாக மக்கள் அவரது படத்தை பார்ப்பதற்கு நம்பி தியேட்டருக்கு வருவார்கள். அந்த வகையில் அரண்மனை 3 படத்தை தொடர்ந்து, அடுத்ததாக சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காபி வித் காதல்.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டணியுடன் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுந்தர்.சியைப் பொறுத்தவரை காமெடியில் மட்டுமல்ல, பாடல்களிலும் தனி கவனம் செலுத்துபவர். அதனால் தான் அவரது படங்களில் பாடல்கள் ரசிகர்களை துள்ளாட்டம் போடும் விதமாக அமைந்து விடுவது வழக்கம்.

அப்படி இந்த படத்தில் யுவனின் இசையில் ஏற்கனவே ரம்பம் பம், பேபி கேர்ள், தியாகி பாய்ஸ், என மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், நான்காவது சிங்களான நாளைய பொழுது என்கிற பாடலை இன்று வெளியிட்டுள்ளார்கள். இந்த பாடல் ரசிகர்களை மோட்டிவேட் செய்யும் விதமாக பா விஜயின் வரிகளில் உருவாகியுள்ளது.

நாளைய பொழுது நலமாக வேண்டும், இன்றைய பொழுது நிஜமாக வேண்டும். நடப்பதை எல்லாம் ஏற்றுக்கொள் மனமே, எண்ணம்போல் தான் எல்லாம் நடக்கிறது” என்று, நம்மை மோட்டிவேட் செய்யும் வண்ணம் பா.விஜய்யின் வரிகளில், யுவனின் காந்தக்குரல் நம்மை இந்த பாடலுக்கு அடிமையாக்கி விடுகிறது.. பாடியதோடு மட்டும் நிறுத்தாமல் இந்த பாடல் முழுதும் சிறப்பு தோற்றத்தில் யுவன் பயணிக்கிறார்..