V4UMEDIA
HomeNewsKollywoodதெலுங்கில் இருந்து இனொரு பான் இந்தியா படமாக உருவாகும் கீடா கோலா

தெலுங்கில் இருந்து இனொரு பான் இந்தியா படமாக உருவாகும் கீடா கோலா

ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஓ மணப்பெண்ணே படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றது. இந்த படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் பலருக்கும் இது தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன

படத்தின் ரீமேக் தான் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் தருண் பாஸ்கர் தாஸ்யம். இந்த படம் தவிர ஈ நாகராணி ஏமைந்தி என்கிற இன்னொரு சூப்பர் ஹிட் படத்தையும் இவர் இயக்கியுள்ளார்.

இப்போது அவர் இயக்கும் புதிய படத்தின் பெயர் கீடா கோலா. பான் இந்தியா படமாக இது உருவாக இருக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் சித்தார்த், தெலுங்கு நடிகர்கள் தேஜா சஜ்ஜா, நந்து மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வழக்கமாக யூத்ஃபுல் பொழுது போக்கு படங்களைங்களாக இயக்குவதில் கில்லாடி என பெயர் பெற்ற இவர் இந்த முறை தனது ரூட்டை மாற்றி புதிய கிரைம் காமெடி படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது.

Most Popular

Recent Comments