தெலுங்கு திரையுலகில் கமர்சியல் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். விஜய் நடித்த போக்கிரி, ஜெயம் ரவிக்கு திருப்புமுனையாக அமைந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஆகிய படங்களின் ஒரிஜினலை தெலுங்கில் இயக்கியவர் இவர்தான். தற்போது இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து முதன்முதலாக இந்தியில் லைகர் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
அவன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்கள் தவிர இந்த படத்தின் மெயின் வில்லனாக நடிகர் விஷ் என்பவர் நடித்துள்ளார். இவர் வேறு யாரும் அல்ல பூரி ஜெகன்நாத்தின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பு வகிப்பவர்.
நடிப்பதற்காக சினிமாவில் நுழைந்த இவர் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின் பூரி ஜெகன்நாத் இயக்கிய மெஹபூபா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை எப்போதுமே தனது குருவாக நலம் விரும்பியாக மதிப்பவர் நடிகர் விஷ். அந்த வகையில் லைகர் படம் வெளியான பிறகு தெலுங்கில் மட்டுமல்லாது. தமிழிலும் நடிகர் விஷ்சுக்கு வில்லனாக மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என நம்பலாம்.