நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் எல்லாம் நற்பணி மன்றங்களாக மாறி இப்போது அவை விஜய் மக்கள் இயக்கமாக உருவெடுத்து சமூகத்திற்கு பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ரத்த தானம் தேவைப்படுபவர்களுக்காக விஜய் குருதியகம் ஆரம்பித்துள்ளனர். ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் வசதியற்றவர்களின் மருத்துவ செலவு ஆகியவற்றை முன்னின்று கவனித்து வருகின்றனர்.
இன்னும் இதுபோன்ற பல ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளும் விதமாக அகில இந்திய தளபதி மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி N.ஆனந்து Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மக்கள் இயக்கத்தின் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது