
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த வியாழனன்று வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம், மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இதற்குமுன் தமிழில் இரண்டு, பாலிவுட், ஹாலிவுட்தில் தலா ஒன்று என தனுஷ் நடிப்பில் வெளியான நான்கு படங்களும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருப்தி தராத நிலையில் அவர்களுக்கு முழு விருந்து அளித்தது போல் இந்த படம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உற்சாகமாகியுள்ள ரசிகர்கள் அடுத்ததாக தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஏற்கனவே நடித்து முடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து சோசியல் மீடியாவில் தங்களது கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தை தயாரித்துள்ள நிறுவனம் இந்த படத்தில் தனுஷின் இரண்டு விதமான கதாபாத்திர தோற்றம் கொண்ட போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அது மட்டுமல்ல இந்த போஸ்டர்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் செல்வராகவன் விரைவில் இந்த படம் வெளியாகும் என கூறியுள்ளதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் இந்துஜா மற்றும் எலி அவுர் ரம் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவனுடன் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.