அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்றும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இவர்கள் தவிர இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிட்டாலும், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு உள்ளிட்ட சிலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 22 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலான மாஸான கேரக்டர் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் செய்துள்ளது.