சூப்பர்ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசுக்கும் 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தாங்கள் பரஸ்பரம் பிரிந்து வாழப் போவதாக அறிவித்து தங்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்தனர்.
அதேசமயம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எந்த ஒரு குற்றச்சாட்டையும் வைக்காமல் அவரவர் வேலையை வழக்கம்போல கவனித்து வருகின்றனர். அதுமட்டும் அல்ல யாத்ரா, லிங்கா என இவர்களது இரண்டு மகன்களும் தங்களது பெற்றோரிடம் மாறிமாறி விரும்பியபடி வசித்து வருகின்றனர்.
தங்கள் பிரிவை அறிவித்த பிறகு இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஒன்றாக பங்கேற்றதில்லை. இந்த நிலையில் இவர்களது மூத்த மகன் யாத்ரா அவரது பள்ளியில் விளையாட்டு குழு கேப்டனாக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மகனின் வாழ்க்கையிலும் படிப்பிலும் முக்கியமான தருணம் இதை என்பதால். தங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து தனுஷ். ஐஸ்வர்யா இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர் விஜய் ஜேசுதாஸும் கலந்து கொண்டார். இவர்கள் பங்கேற்ற புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.