V4UMEDIA
HomeNewsKollywood“எனது படங்களில் இருந்து மாறுபட்டு உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது” ; பா ரஞ்சித் புது தகவல்

“எனது படங்களில் இருந்து மாறுபட்டு உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது” ; பா ரஞ்சித் புது தகவல்

சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு இயக்குனர் பா.இரஞ்சித்    “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர்,  சார்லஸ் வினோத், வின்சு , சுபத்ரா, தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்தபடத்தை யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல் ஜாசன் தயாரித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் பா.இரஞ்சித் கூறும்போது, “’நட்சத்திரம் நகர்கிறது காதல் படம் அல்ல காதலைப்பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும்பொழுது காதலாகத்தான் ஆரம்பமாகுது. அது குடும்பத்துக்கு தெரியும்பொழுதுதான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது.

இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு. காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிபிணைந்ததாக இருக்கிறது. காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை. இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதை பற்றி விவாதிக்கிற படம்தான் “நட்சத்திரம் நகர்கிறது”

இதில் ஆண் பெண் காதல்கள் மட்டும் இல்லாது ஒரு பாலின காதலைப்பற்றியும், திரு நங்கையின் காதலைப்பற்றியும் பேசுகிறோம். பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்க கூடுகிற நடிகர்கள், அவர்களின் எமோஷ்னல், காதலை விவரிக்கிறது இந்தப்படம். ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப்பார்க்கிறது என இந்த படம் முழுக்கபேசுகிறோம். நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். நல்லா வந்திருக்கு..

‘நட்சத்திரம் நகர்கிறது ” படம் இதுவரை நான் எழுதி எடுத்த சினிமாவில் இது மாறுபட்டு இருக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் இது முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் பா.இரஞ்சித் 

ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

Most Popular

Recent Comments