கடந்த 2006ல் சுந்தர்.சி நடிப்பில் வெளியான படம் தலைநகரம். இந்த படத்தில் முதன்முறையாக கதாநாயகனாகவும் மாறினார் சுந்தர்.சி. சுராஜ் இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் 16 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தலைநகரம் 2 என்கிற பெயரில் உருவாகி வருகிறது.

வி.இசட்.துரை இயக்கிவரும் இந்த படத்தில் கதாநாயகியாக லாலக் பால்வணி நடிக்க, முக்கிய வேடங்களில் வடிவேலு, யோகிபாபு, தம்பி ராமையா மற்றும் பாகுபலி புகழ் காளகேயா பிரபாகர் நடித்து வருகின்றனர்

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கியுள்ள நிலையில் தனது போர்ஷனுக்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் சுந்தர்.சி.