V4UMEDIA
HomeNewsKollywood15 நாட்களில் 65 கோடி வசூலித்த சீதாராமம்

15 நாட்களில் 65 கோடி வசூலித்த சீதாராமம்

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆக-5ஆம் தேதி தெலுங்கில் வெளியான சீதாராமம் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதற்கு மீடியாவிலும் ரசிகர்களிடமும் என பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து தெலுங்கில் உருவாகி உள்ள இந்த படம் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியானது..

தெலுங்கு இயக்குனர் ஹனுராகவபுடி இந்த படத்தை இயக்கியுள்ளார். ராணுவ பின்னணி கலந்த காதல் கதையாக வித்தியாசமான கதைக்களத்தில் வித்தியாசமான கோணத்தில் இந்தப்படம் உருவாகி உள்ளதால் ரசிகர்களை இந்த படம் எளிதாக கவர்ந்து விட்டது என திரையரங்கு வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆனா நிலையில் தற்போது உலகம் முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட 65 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

மலையாள நடிகர் ஒருவர் தெலுங்கில் நேரடியாக நடித்த படம் இந்த அளவு சாதனை செய்வது இதுவே முதன்முறை ஆகும்.

Most Popular

Recent Comments