V4UMEDIA
HomeNewsKollywoodஇரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார் நமீதா

இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார் நமீதா

ரசிகர்களை செல்லமாக ‘மச்சான்ஸ்’ என அழைப்பவர் நடிகை நமீதா. விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நமீதா. தொடர்ந்து ‘ஏய்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘சாணக்யா’, ‘கோவை பிரதர்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின் பட வாய்ப்புகள் குறைந்ததும் புதுமுக நடிகர் வீரேந்திரா சவுத்ரி என்ற வீராவை திருமணம் செய்துகொண்டார் நமீதா. ‘மியா’ படத்தில் நமீதாவும் வீராவும் இணைந்து காதல் வயப்பட்டு திருமணத்தில் இணைந்தனர்.

கடந்த மே மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்தநிலையில் தற்போது ஒரேசமயத்தில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் நமீதா. குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை தான் நமீதாவின் பிரசவத்தை கவனித்துள்ளது.

இந்த தகவலை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையான இன்று சந்தோஷத்துடன் அறிவித்துள்ள நமீதா, கூடவே தானும் தனது கணவர் வீராவும் ஆளுக்கொரு குழந்தையை கைகளில் ஏந்தியபடி கோவில் தரிசனமும் செய்தார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Most Popular

Recent Comments