V4UMEDIA
HomeNewsKollywoodவிஜய் தேவரகொண்டாவின் பாதுகாப்பிற்காக அவரது அம்மா செய்த யாகம்

விஜய் தேவரகொண்டாவின் பாதுகாப்பிற்காக அவரது அம்மா செய்த யாகம்

சாக்லேட் ஹீரோ என்கிற வரிசையில் இடம் பெற்றுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா, தான் நடித்த முதல் இரண்டு படங்களிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இதை தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவின் கமர்சியல் இயக்குனரான பூரி ஜெகன்நாத் டைரக்ஷனில் லைகர் என்கிற படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

இந்த படம் இந்தியில் உருவாகியுள்ளது குத்து சண்டையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மும்பை, சண்டிகர், ஹைதராபாத், சென்னை, கேரளா என மாறிமாறி பறந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.

இந்த நிலையில் தனது மகனின் பயணம் எந்தவித தடங்கலும் இன்றி அமையவேண்டும் என்று அவரது தாயார் சமீபத்தில் யாகம் ஒன்றை தனது வீட்டில் செய்துள்ளார். இதில் விஜய் தேவரகொண்டாவும் படத்தின் நாயகி அனன்யா பாண்டேவும் கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு கருதி கைகளில் காப்பு கட்டி விட்டுள்ளார் விஜய் தேவரகொண்டாவின் தாயார்.

இது பற்றி விஜய் தேவரகொண்டா கூறும்போது இனிமேல் எனது தாயார் என்னை பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக உறங்குவார் என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments