பெரும்பாலும் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் வரை உள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டு என்னவென்றால் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்களின் வாரிசுகள் எளிதாக சினிமாவில் நுழைந்து விடுவதாகவும் ரொம்பவே கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைப்பவர்களின் வாய்ப்புகளை அவர்கள் தட்டி பறித்துக் கொள்வதாகவும் நீண்ட நாளாகவே ஒரு விவாத பொருளாக பேசப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் இப்படி பேசுபவர்களுக்கு பிரபலங்களின் வாரிசுகள் அந்த அடையாளத்துடன் எளிதாக வாய்ப்புகள் பெற்று விடுகிறார்களே என்கிற ஆதங்கம் தான். மேலும் இதுவரை எத்தனையோ வாரிசுகள் சினிமாவில் நுழைந்திருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே அவர்களால் நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியும் என்பதையும் ரசிகர்கள் பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

இந்த நிலையில் கொடை என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி என் குடும்பத்தில் இருந்து யாரும் நடிக்க வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்.. வாரிசுகள் சினிமாவுக்கு வந்தால் தான் நம் பெயர் நிலைக்கும் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ராஜா செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க அனயா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மற்றும் ரோபோ சங்கர், எம்,.எஸ் பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஐந்து பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார்.