பொதுவாக சினிமா ஹீரோக்களின் ரசிகர்கள் தான் தங்களது அபிமான ஹீரோக்களின் பிறந்த நாளை கட்டவுட், பாலாபிஷேகம், அன்னதானம் என விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் ஒரு நடிகையின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் இதேபோன்று விமர்சையாக பிறந்த நாள் கொண்டாடி இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். அவர் வேறு யாரும் அல்ல நடிகை நிதி அகர்வால் தான்.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக பூமி மற்றும் சிம்புவின் ஜோடியாக ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்த நிதி அகர்வால் தெலுங்கில் பிஸியான நடிகையும் கூட. இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
மேலும் பசியில் வாடும் ஏழை குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உணவு பொட்டலங்களை அளித்து தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஒரு நடிகையின் பிறந்தநாள் என்றாலும் நாலு பேருக்கு பயன்படும் விதமாக அவரது ரசிகர்கள் அதை கொண்டாடியது சோசியல் மீடியாவில் வரவேற்பை பெற்று வருகிறது.