Home News Kollywood ஷாருக்கான் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய்சேதுபதி

ஷாருக்கான் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளவட்ட நடிகர்களின் நடிகர் விஜய்சேதுபதி ரொம்பவே வித்தியாசமானவர் ஒரே சமயத்தில் கதாநாயகனாக, வில்லனாக, ஒரு காட்சியில் வந்து செல்லும் கதாபாத்திரமாக, வயதானவராக என எந்த கதாபாத்திரத்திலும் தன்னை பொருத்திக்கொண்டு நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

இதனால் இவருக்கு தமிழையும் தாண்டி தெலுங்கு மலையாளம் ஹிந்தி என வாய்ப்புகள் நிறைய தேடி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே இந்தியில் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இதைத்தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா கதாநாயகியாக நடித்துவரும் ஜவான் என்கிற படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ன சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி ஜவான் படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்தார். அதேசமயம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அந்த படத்தில் நடிக்கவில்லை என விஜய்சேதுபதியின் டீம் மறுப்பு தெரிவித்துள்ளது.