V4UMEDIA
HomeNewsKollywoodஅமலாபால் படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நடிகர்

அமலாபால் படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நடிகர்

சமீபத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான படம் கடாவர். இந்த படத்தை அமலாபாலே தயாரித்தும் இருந்தார். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் இளம் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தவர்கள் அதுல்யா ரவியும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த திரிகுன் என்கிற நடிகரம் தான்.

திரிகுன் ஏற்கனவே தமிழில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு மொழிக்கு சென்று அங்கே பிஸியாக நடித்து வருகிறார். கன்னடத்திலும் கூட நடித்துள்ளார், தற்போது கடாவர் படம் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அதில் நடித்த திரிகுன்னும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. தமிழில் முன்னணி இயக்குனர் ஒருவரின் படத்தில் நடித்து வரும் திரிகுன் மீண்டும் தாய்மொழியில் படங்களில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி உள்ளார்.

Most Popular

Recent Comments