வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவில்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பார்த்து படையப்பாவில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு வசனம் பேசுவார். அதுபோலத்தான் வயசானாலும் கூட இன்னும் இளைஞர்கள் போல டைரக்ஷனில் இறங்கி வெளுத்து கட்டி வருகிறார் இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகரன்.

இந்த வகையில் அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 71 வது படம் தான் நான் கடவுள் இல்லை. சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சாக்சி அகர்வால் நடித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் ஆரம்பித்து விட்டாலும் இடையில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பில் தேக்கநிலை ஏற்பட்டது. அதன்பிறகு தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் இந்த படத்தில் தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் நாயகி சாக்சி அகர்வால். அந்த சந்தோஷத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்ல நேர்மையாக சொல்ல வேண்டுமானால் உங்களுடன் பணி புரிந்தது எனக்கு மிகப்பெரிய கற்றுக் கொள்ளும் அனுபவமாக அமைந்தது சார்.. உண்மையிலேயே நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன் தான்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால் இந்த படமும் வழக்கம்போல எஸ் எஸ் சந்திரசேகரன் பாணியில் ஆக்சன் படமாகவே உருவாகியுள்ளது