சினிமாவில் அறிமுகமான குறுகிய காலகட்டத்திலேயே ஜிகர்தண்டா என்கிற படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து தேசிய விருதும் பெற்றவர் நடிகர் சிம்ஹா. அதைத்தொடர்ந்து அவர் சில படங்களில் நடித்தாலும் இன்னும் அவரது மார்க்கெட்டை நிலைநிறுத்தும் விதமாக படம் எதுவும் வெளியாகவில்லை என்பது சற்று வருத்தமான செய்தி தான்.
இந்த நிலையில் தற்போது தடை உடை என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பாபி சிம்ஹா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மிஷா நரங்த் என்பவர் நடிக்கிறார், அறிமுக இயக்குனர் என்.எஸ்.ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபு, செந்தில், ரோகிணி மணிகண்ட பிரபு, சரத் ரவி, பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோகினி தொடர்பான காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் நடிகை ரோகிணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி அவருக்கு விடை கொடுத்துள்ளனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவு பெற இருக்கிறது. முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்கிற பெயரில் சிம்ஹாவின் மனைவி நடிகை ரேஷ்மி சிம்ஹா பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.