நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வையுங்கள் என வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அது மட்டுமல்ல தனது சோசியல் மீடியா ப்ரோபைல் படத்தையும் தேசியக் கொடியாக மாற்றி இருந்தார். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால் உள்ளிட்ட பலரும் தங்களது புரொஃபைல் படத்தை தேசிய கொடிக்கு மாற்றினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடும் விதமாக வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது ;
“இந்தியாவிற்கு, நமது தாய்நாட்டிற்கு இது 75வது சுதந்திர தினம். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் மரியாதை செலுத்தும் வகையிலும் சொல்லன்னா போராட்டங்களையும், துயரங்களையும், வலிகளையும், அவமானங்களையும் அனுபவித்த லட்சக்கணக்கான மக்களுக்கு, இந்த சுதந்திரத்திற்காக தன்னலம் இன்றி உயிர் தியாகம் செய்த அத்தனை மக்களுக்கும் மரியாதையின் அடையாளமாகவும் நமது ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் அந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், வீரமரணம் அடைந்தவர்கள் தலைவர்களை போற்றி பெருமைப்படுத்துவோம்.
ஜாதி, மதம் மற்றும் அரசியலை தாண்டி நமது வீடுகள் அலுவலகங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் தேசியக்கொடியை ஏற்றி அதன் பெருமையை நமது அடுத்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு செல்வோம்.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவோம். நாம் வணக்கம் செலுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி பறக்கட்டும்” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.