V4UMEDIA
HomeNewsKollywoodலட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். பின்னர் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொடர்ந்து நடத்தி, அதன் மூலம் இன்னும் அதிக புகழ் பெற்றார். இன்னொரு பக்கம் அவருக்குள் இருந்த படைப்பாளி வெளிப்பட்டு இயக்குனராக மாறி இதுவரை ஆரோகணம் அம்மணி ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்த நிலையில் அடுத்ததாக சமுத்திரக்கனி, அம்மு அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்

லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் இசைஞானியுடன் பணி பணி புரிவதை ஆசீர்வதிக்கப்பட்டதாக கூறியுள்ளதுடன் இது மிகப் பெரிய அனுபவமாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments