தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். அதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தில் கதாநாயகிகளாக நித்யா மேனன். பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகிய நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக பழைய படிக்காதவன், திருவிளையாடல் ஆரம்பம் பட தனுஷை மீண்டும் இதில் பார்க்க முடியும் என ரசிகர்கள் சந்தோசமாக இந்த படத்தை எதிர்பார்க்கின்றனர்.