அனிருத் திரையுலகில் இசையமைப்பாளராக அடி எடுத்து வைத்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது ரஜினி, கமல், விஜய் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசை அமைக்கும் அளவிற்கு முன்னணி இசையமைப்பாளராக மாறிவிட்டார். இன்னொரு பக்கம் வெளிநாட்டில் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சியும் நடத்தினார். அனிருத்.

அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இந்தநிலையில் அவர் சினிமாவில் நுழைந்து பத்து வருடம் ஆனதை கொண்டாடும் விதமாக தமிழ்நாட்டிலேயே லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி நடத்துகிறார் அனிருத்.

சென்னையில் வரும் செப்டம்பர் மாதமும் கோவையில் அக்டோபர் மாதமும் என இரண்டு இடங்களில் லைவ் கான்செர்ட் நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அனிருத்..