இயக்குனர் சாம் ஆண்டன் அதர்வா கூட்டணியில் உருவான 100 என்கிற படம் விறுவிறுப்பாகவும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த இருவர் கூட்டணி ட்ரிக்கர் என்கிற படத்திற்காக இணைந்துள்ளது.
கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க முக்கிய வேடங்களில் அருண்பாண்டியன், முனீஸ்காந்த், வினோதினி உள்ளிட்ட பலன் அளிக்கின்றனர் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது இந்த டீசரை பிரபல தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வெளியிட்டுள்ளார்