கடந்த 2019-ல் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான படம் சர்வம் தாள மயம். இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ்மேனன் இயக்கியிருந்தார். ஆர் ரகுமான் இந்தப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் மறைந்த நடிகர் நெடுமுடி வேணு நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் பிரகாஷின் நடிப்பு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. இந்தநிலையில் இந்த படம் விரைவில் ஜப்பானில் வெளியாக இருகிறது.

இந்த தகவலை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு தகவலை தெரிவித்து படத்தின் இயக்குனர் ராஜீவ் மேனனுக்கும் நாயகன் ஜீவி பிரகாஷுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தான் சூரரைப்போற்று படத்தின் சிறந்த இசைக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் ஒன்று ஜப்பானிலும் வெளியாகிறது என்பது அவரது திரையுலக பயணத்தில் இன்னும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.