வனமகன் என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷா சைகல் அதைத் தொடர்ந்து விஜய்சேதுபதி, ஆர்யா ஆகியோரின் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

குறிப்பாக ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் டெடி படத்தில் இணைந்து நடித்த சமயத்தில் இவர்களது காதல் உறுதியாகி அது திருமணத்தில் முடிந்தது.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே துணிச்சலுடன் சினிமாவை ஒதுக்கிவைத்து குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து சாயிஷா தனது கணவர் ஆர்யாவின் திரையுலக பயணத்திற்கும் அவரது விளையாட்டு பயணத்திற்கும் உறுதுணையாக இருந்து வருகிறார். தற்போது கூட ஆர்யா எடின்பர்க் நகரத்தில் நடக்கும் சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

இந்தநிலையில் சாயிஷா தனது தாயாருடன் காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் அங்கே தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாயிஷா.