கடந்த சில வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தற்போது இந்தியிலும் ரீமேக் ஆகி வருகிறது. விறுவிறுப்பான கதையம்சத்துடன் ஒரே நாளில் நடக்கும் கதையாக, கைதி ஒருவர் காவல்துறையினரை காப்பாற்றும் வித்தியாசமான பின்னணியில் இந்த படம் உருவாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் கூட இந்த படத்தில் இடம் பெற்ற நரேன் கதாபாத்திரமும் இணைக்கப்பட்டிருந்தது. கூடவே கார்த்தியின் டில்லி கதாபாத்திரம் கூட விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் கைதி-2 எப்போது தொடங்கும் என்கிற ஆர்வம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.
இந்த நிலையில் தற்போது விருமன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரும் கார்த்திஇடம் கைதி படம் எப்போது துவங்கும் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து கார்த்தி கூறும்போது விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் முடித்துவிட்டு வந்ததும் கைதி 2 தொடங்கும் என கூறியுள்ளார்.