V4UMEDIA
HomeNewsKollywoodஎஸ்ஜே சூர்யாவின் மைலேஜை இன்னும் கூட்டுமா கடமையை செய் ?

எஸ்ஜே சூர்யாவின் மைலேஜை இன்னும் கூட்டுமா கடமையை செய் ?

எஸ்ஜே சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள கடமையைச் செய் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தை வெங்கட்ராகவன் என்பவர் இயக்கியுள்ளார் இவர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதுடன் அவரை வைத்து சில வருடங்களுக்கு முன்பு முத்தின கத்திரிக்கா என்கிற படத்தையும் இயக்கியவர்.

இப்போது இவர் இயக்கியுள்ள கடமையைச் செய் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஒரு தனியார் செக்யூரிட்டி நபராக நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே எஸ்ஜே சூர்யாவின் படங்கள் கவனம் பெற்று ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகின்றன. அவர் கதாநாயகனாக நடித்த மான்ஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைவிட கடந்த நவம்பர் மாதம் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் விறுவிறுவென மேலே ஏறி உள்ளது.

அந்த படத்தில் அவரது நடிப்பு பல ரசிகர்களை தியேட்டர்களுக்கு திரும்பத் திரும்ப வரவழைத்து பார்க்க வைத்தது என்றால் அது மிகை அல்ல. அந்த வகையில் தற்போது கடமையை செய் படம் வெளியாவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.

இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்டுமா ? எஸ்ஜே சூர்யாவின் திரையுலக பயணத்தில் மைலேஜை இன்னும் கூட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Popular

Recent Comments