இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. இந்த படத்தில் நடிகர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி உள்ளது
இந்த படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட எட்டு விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அதுகுறித்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இந்த படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்ட பணிகளும் நடைபெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என முதலில் அறிவிப்பு வெளியானது.
ஆனால் இன்னும் படத்தின் பணிகள் மீதம் இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டு, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அன்றைய தேதியில் தான் முதலில் கார்த்தியின் விருமன் படமும் சிவகார்த்திகேயன் தெலுங்கில் நடித்துள்ள பிரின்ஸ் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கார்த்தியின் விருமன் ஆகஸ்ட் 12ல் வெளியாகிறது..
அந்த வகையில் கோப்ரா மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதும் சூழல் தற்போது உருவாகி உள்ளது.