கடந்த 2௦௦5ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. அதை தொடர்ந்து மீண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்தே இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தாலும் அது மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.
இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் பாகம் சந்திரமுகி 2 என்கிற பெயரில் உருவாகிறது என்றும் அதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பி.வாசுவே இயக்குகிறார் இதில் ராதிகா, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்..

இயக்குனர் பி.வாசுவை பொறுத்தவரை எப்போதுமே தெளிவாக திட்டமிடுவதிலும் வேகமாக படப்பிடிப்பை நடத்துவதிலும் அதிக கவனம் செலுத்துபவர். அந்த வகையில் தற்போது சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அடுத்த கட்ட படிப்படிப்பும் கூடிய விரைவில் துவங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.