அமலாபால் நடிப்பில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு வெளியாக இருக்கும் படம் கடாவர். வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்த படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை அனூப் எஸ். பணிக்கர் இயக்கியுள்ளார் படத்தில் முக்கிய வேடங்களில் ஹரிஷ் உத்தமன், அதுல்யா ரவி கிருத்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிலாஷ் பிள்ளை என்பவர் இந்த கதையை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குனர் பேசும்போது, 2010ல் இந்த கதையை எழுத துவங்கிய பின், இதை பல தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் கதையின் மையக்கருத்தையே மற்றும் அளவுக்கு ஆலோசனை சொன்னார்கள்.

அந்தசமயத்தில் அமலாபாலிடம் இந்த கதையை சொன்னதும் அவருக்கு உடனே பிடித்து விட்டது. அதே சமயம் எங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்ததை பார்த்துவிட்டு, அவரே தயாரிப்பாளராக மாறி இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார்.

படத்தை எடுக்க துவங்கியதில் இருந்து தற்போது வெளியீடு வரை இந்த படத்தை தடுப்பதற்காக பலபேர் முயற்சி செய்து வருகின்றனர். அதையெல்லாம் சமாளித்து தாங்கிக்க்கொண்டு இந்த படத்தை இப்போது ரிலீஸ் வரை கொண்டு வந்துள்ளார் அமலாபால். எங்களை பொறுத்தவரை அவர் எங்களுக்கு கடவுள் மாதிரி” என்று நிகழ்ந்து போய் கூறினார் இயக்குனர் அனூப் எஸ் பணிக்கர்.