தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியுள்ளது கணம். தெலுங்கில் ஓகே ஓகே ஜீவிதம் என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் சர்வானந்த், ரித்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், நாசர், எம்எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.

இது சயின்ஸ் பிக்சன் வகையை சேர்ந்த படமாக உருவாகியுள்ளது அதனால் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு படக்குழுவினர் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழில் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.