V4UMEDIA
HomeNewsKollywoodதி கிரே மேன் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த தனுஷ்

தி கிரே மேன் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த தனுஷ்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் தனுசுக்கு பாலிவுட், அதை தாண்டி தற்போது ஹாலிவுட் வரை மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நடித்த தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படம் வெளியானது. இந்த படத்தில் கொஞ்ச நேரமே வந்து செல்லும், அதே சமயம் முக்கியமான நெகட்டிவ் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து தனது முத்தரையை பதித்திருந்தார் நடிகர் தனுஷ்.

இந்த படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இயக்கியிருந்தனர். தனுஷ் இந்த படத்தில் நடித்திருப்பதாலேயே இந்தியாவிற்கு வந்து இந்த படத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அப்படியானால் இந்த இரண்டாம் பாகத்தில் தனுஷும் இடம்பெறுவாரா என்கிற கேள்வியும் ரசிகர்களிடம் இருந்தது.

இதற்கு விடை சொல்லும் விதமாக படத்தின் இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ஒரு பேட்டியின் போது தனுஷ் நிச்சயமாக இரண்டாம் பாகத்தில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

தற்போது தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் இந்த படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்து அறிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்

Most Popular

Recent Comments