Home News Kollywood ஒரே நாளில் வெளியான வரலட்சுமி சரத்குமாரின் இரண்டு படங்கள்

ஒரே நாளில் வெளியான வரலட்சுமி சரத்குமாரின் இரண்டு படங்கள்

சிம்புவுடன் போடா போடி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. ஆரம்பம் தான் மெதுவாக நகர்ந்ததே ஒழிய, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்ற வரலட்சுமி, அடுத்ததாக தான் போக வேண்டிய பாதை இதுதான் என தனக்கென ஒரு தனி வழியை உருவாக்கினார்.

எல்லோரும் கதாநாயகர்களுடன் டூயட் பாடிக்கொண்டிருக்க, அவரோ கதையின் நாயகியாக, வில்லியாக என பலவிதமான கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் இன்று பிஸியான நடிகையாக நடித்து வருகிறார் வரலட்சுமி,

இதற்கு சாட்சியாக இன்று அவர் நடித்துள்ள காட்டேரி மற்றும் பொய்க்கால் குதிரை என இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன. இதில் காட்டேரி திரைப்படம் ஹாரர் மற்றும் காமெடி கலந்து உருவாகியுள்ளது. யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய டீகே இந்த படத்தை இயக்கியுள்ளார்.வைபாவ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சோனம் பஜ்வா மற்றும் ஆத்மிகா ஆகியோரும் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

பொய்க்கால் குதிரை திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.