தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களை மட்டும் புரிந்து கொள்ளவே முடியாது. அப்படி ஒருவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அடுத்தடுத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கி டாப் கியரில் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார் பா ரஞ்சித்.
அதை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் படங்களை இயக்குவார் என நினைத்தால் யாரும் எதிர்பாராத விதமாக ஆர்யாவை வைத்து சார் பட்டா பரம்பரை என்கிற படத்தை இயக்கி அதையும் வெற்றி படமாக்கி, அந்த படம் குறித்து பல நாட்கள் பலரையும் பேச வைத்தார்.
அந்த படத்தில் ஆர்யாவுக்கு வெற்றியை கொடுத்ததுடன் அதில் நடித்த பல நடிகர்களுக்கும் புகழ் வெளிச்சம் போட்டுக் கொடுத்தார் பா ரஞ்சித். அடுத்ததாக விக்ரம் படத்தை இயக்கப் போகிறார்.
ஆனால் அதற்கு முன்னதாக யாரும் எதிர்வாராத விதமாக மீண்டும் காளிதாஸ், கலையரசன் போன்ற வளர்ந்து வரும் இளம் நடிகர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்கியுள்ளார். பா ரஞ்சித்.
இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் மெட்ராஸ் ஹரி, சபீர் வினோத், மைம்கோபி, துஷாரா ஆகியவர்களோடு இன்னும் புதுமுகங்கள் பலரும் நடித்துள்ளனர்.