Home News Kollywood ஆகஸ்ட் 31ல் பார்டர் தாண்டும் அருண்விஜய்

ஆகஸ்ட் 31ல் பார்டர் தாண்டும் அருண்விஜய்

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ‘யானை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெற்றிப்படமாக தன்னை பதிவு செய்து கொண்டது. இதைத் தொடர்ந்து அருண் விஜயின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.

அந்த வகையில் குற்றம் 23 என்கிற படத்தில் இயக்குனர் அறிவழகனுடன் இணைந்த அருண்விஜய் மீண்டும் பார்டர் என்கிற படத்திலும் அவரது டைரக்ஷனில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆக-31 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குற்றம் 23, பார்டர் இந்த இரண்டு படங்களை தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸுக்காக இயக்குனர் அறிவழகனும் அருண் விஜயின் கைது கோர்த்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல். இந்த வெப் சீரிஸ் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் உருவாகி வெளியாக இருக்கும் பார்டர் திரைப்படமும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ரெஜினா நடிக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பார்டர் என்கிற டைட்டிலுக்கு ஏற்ற வகையில் ராணுவ பின்னணி கொண்ட கதையில் இந்த படம் உருவாகி உள்ளது.