தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய சினிமா அளவில் கடந்த 30 வருடமாக பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் என பெருமை பெற்று வளம் பெறுபவர் இயக்குனர் ஷங்கர். இவரது முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் இருந்து கடைசியாக வெளியான 2.0 வரை ஒவ்வொரு படத்திலும் பிரமிப்பு, பிரம்மாண்டம் என தமிழ் சினிமாவை இந்திய அளவிலும் அதன்பிறகு உலக அளவிலும் எடுத்துச்சென்ற பெருமை இயக்குனர் ஷங்கருக்கு மட்டுமே பொருந்தும்.
குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு அடுததபடியாக உலக அளவில் மிகப்பெரிய வியாபாரத்தை உருவாக்கிக் கொடுத்ததும் இயக்குனர் ஷங்கரின் படங்கள் தான் என்றால் அது மிகை அல்ல.
அப்படி சினிமாவில் தனது இத்தனை வருட பங்களிப்பை கொடுத்து மக்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் ஷங்கரை கௌரவிக்கும் விதமாக ஐசரி கணேசஷின் வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது. ஆக-5ஆம் தேதி நடைபெற உள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.