தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி என்கிற சினிமா பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்ததால் அவருக்கும் அவரது மகன் உதயநிதிக்கும் இயல்பாகவே சினிமா மீது ஆர்வம் வந்தது வியப்பில்லை. உதயநிதி நடிகராகி விட்டார். அதேசமயம் முதல்வர் மு.க ஸ்டாலின், தனது தந்தையை போலவே சினிமா மீதான பாசத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் வெளிப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக நல்ல படங்களை ஊக்குவித்து தனது பாராட்டுகளையும் வெளிப்படுத்த அவர் தவறுவது இல்லை. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் இயக்கத்தில் சாதனை படமாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டு வெளியான இரவின் நிழல் படத்தை நேரம் ஒதுக்கி பார்த்து உள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின்.

படம் பார்த்துவிட்டு பார்த்திபனின் இந்த வித்தியாசமான புதிய முயற்சி குறித்து தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில் பார்த்திபன் இந்த படத்திற்காக தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து முதல்வரிடம் விளக்கி கூறினார்.