தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 47 வருடங்களாக முடிசூடா மன்னனாக நம்பர் ஒன் இடத்தில் அமர்ந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு பல்வேறு பட்டங்களும் பெருமைகளும் தொடர்ந்து தேடி வந்துகொண்டே இருக்கின்றன.

நாட்டின் மிக உயரிய விருதுகளான தாதா சாகிப் பால்கே, பத்ம விபூஷன், கலைமாமணி என பல உயரிய விருதுகள் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்டு தங்களுக்கான பெருமையும் தேடிக்கொண்டன என்று கூட சொல்லலாம். மிக அதிகமான வரி செலுத்தும் நடிகர் என்கிற பெருமையும் சமீபத்தில் அவருக்கு கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது நியூஸ் 18 குழுமம் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அம்ரித் ரத்னா என்கிற விருது வழங்கப்பட்டுள்ளது. திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பங்களிப்பை பாராட்டி கௌரவிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவரது சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

மேலும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி இந்த விருதை தனது தந்தைக்கு வழங்கியதற்காக தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.