V4UMEDIA
HomeNewsKollywoodபொய்க்கால் குதிரையில் டி.இமான் அறிமுகப்படுத்தும் புதுமுகம்

பொய்க்கால் குதிரையில் டி.இமான் அறிமுகப்படுத்தும் புதுமுகம்

தமிழ் திரை உலகில் இசை ஜாம்பவான்களாக விளங்கும் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் ஆகியோர் கலந்த ஒரு கலவையாக அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதை வருடும் இசையை கொடுத்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளவர் இசையமைப்பாளர் டி.இமான்.

ஒவ்வொரு படத்திலும் ஹிட் பாடல்களை கொடுத்தே தீருவது என படந்தோறும் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் இமான், திறமையான புது புது பாடகர்களையும் இசையுலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் கூட ரயிலில் ஒரு பெண் பாடிய வீடியோ வெளியானதை தொடர்ந்து, அந்த குரலால் ஈர்க்கப்பட்ட இமான் இந்த பெண் குறித்த தகவல்கள் தெரிந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அந்த அளவிற்கு திறமையாளர்களை கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவரும் இமான் தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொய்க்கால் குதிரை படத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பாடகி ஆஸ்னா என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தப்படத்திற்காக பாடலாசிரியர் கார்க்கி எழுதிய பாடலை தான் இவர் பாடியுள்ளார் வரும் ஆக-5ஆம் தேதி பொய்க்கால் குதிரை படம் வெளியாக உள்ள நிலையில், இமான் அந்த படத்தில் இலங்கையை சேர்ந்த ஒரு புதிய பாடகியை அறிமுகப்படுத்தியுள்ளது ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகின்றது.

Most Popular

Recent Comments