V4UMEDIA
HomeNewsKollywoodஅறிமுக படத்திலேயே இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கிடைத்த இன்னொரு கௌரவம்

அறிமுக படத்திலேயே இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கிடைத்த இன்னொரு கௌரவம்

இயக்குனர் ஷங்கரின் மகன் அதிதி சங்கர் மருத்துவ படிப்பு படித்திருந்தாலும் தந்தையை போலவே சினிமாவில் நாட்டம் கொண்டவர் என்பதால் நடிகையாக தனது பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த வகையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே கஞ்சாப்பூவு கண்ணாலே என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது மதுரை வீரன் என்கிற பாடல் புரோமோ வெளியாகி உள்ளது இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த பாடலையும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து அதிசியே பாடியுள்ளார்

அந்த வகையில் நடிகையான முதல் படத்திலேயே தனக்காக தானே பாடி அந்த அதற்கு படத்தில் அற்புதமான நடனமும் ஆகியுள்ளார் அதிதி.

Most Popular

Recent Comments